காரசாரமான ருசியில் உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!

Summary: பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப்பிடுவது இந்த உருளைக்கிழங்கை மட்டும் தான். ஆனால் இந்த உருளைக்கிழங்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரி வீட்டில் சமைக்காமல் ஒருமுறை இது போன்ற உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp சோம்பு
  • 1 tsp மிளகு
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 12 சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 tbsp சோள மாவு
  • ½ tsp உப்பு
  • பொரிக்க எண்ணெய்
  • 1 tbsp எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 tsp மிளகாய் தூள்
  • அரைத்த தேங்காய்
  • உப்பு
  • பொரித்த உருளைக்கிழங்கு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் மசாலா அரைப்பதற்கு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, மூன்று பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  2. பின் இதனுடன் தோலுரித்த 12 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின் தேங்காய் நன்கு வறுபட்டு உதிரி உதிரியாக வந்ததும்.
  3. பின் கடாயை கீழ் இறக்கி குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கொர கொரவன அரைத்து கொள்ளுங்கள். பின் ஒரு பெரிய பவுளில் நீள் வாக்கில் நறிக்கிய மூன்று உருளைக்கிழங்கை சேர்த்து.
  4. பின் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரெட்டி கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பச்சை மிளகாய் பிய்ச்சி போட்டு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின் இதனுடன் நாம் அரைத்த தேங்காய் சேர்த்து ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் மசாலாவின் பச்சை வாடை போன பின்.
  7. நாம் பொரித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் கடைசியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் தயாராகிவிட்டது.