மணக்க மணக்க ருசியான பருப்பு குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: இனி சுட சுட சாதத்திற்கு பருப்பு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க ருசியாக இருக்கும். சுலபமாகவும் செய்து விடலாம்.இந்த குழப்பு செய்து இட்லி, தோசை, போன்றவற்றிற்கும் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.

Ingredients:

  • ¾ டீஸ்பூன் சீரகம்
  • 5 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • 8 பச்சை மிளகாய்
  • புளி
  • ¾ கப் துவரம் பருப்பு
  • மஞ்சள் பொடி
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1½ டீஸ்பூன் கடுகு
  • கட்டி பெருங்காயம்
  • 5 வர மிளகாய்
  • 20 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு உரல் அல்லது மிக்ஸ்சில் சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்துக்கொள்ளவும்.
  2. அடுத்து குக்கரில் துவரம் பருப்பை நன்கு கழுவி 2¼ கப் தண்ணீர் ஊற்றி அத்துடன் இடித்து வைத்துள்ள பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து மற்றும் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து சேர்த்து 3 விசில் விட்டு பக்குவமாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. அந்த பருப்பை கடைந்து எடுத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் வரமிளகாய் சேர்த்து சிவக்க விட்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் சிறிது சிவக்க வதக்கிக்கொள்ளவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் புளி தண்ணீர் சேர்த்து 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கொதித்ததும் வேக வைத்து கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகளை சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.