மொறு மொறுனு ரவா தோசை செய்வது எப்படி ?

Summary: ரவா தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும். முக்கியமாக இந்த ரவா தோசை நீங்கள் செய்தால் உங்கள் குழந்தைகள் தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் நீங்கள் இந்த தோசையை சுட்ட பின் சூடு ஆரிய பிறகு கூட தோசை மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான ரவா தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் ரவை
  • 1 கப் அரிசி மாவு
  • 2 tbsp மைதா
  • 2 tbsp தயிர்
  • 2 tbsp இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • ½ tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • ½ tbsp கருவேப்பிலை
  • ½ tbsp கொத்தமல்லி
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் மாவு தயார் செய்வதுற்கு ஒரு பெரிய பவுள் எடுத்துக் கொண்டு அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் ஒரு கப் ரவை" ஒரு கப் அரிசி மாவு மற்றும் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு இதனுடன் இரண்டு டீஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, 2 டீஸ்பூன் பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம் மற்றும் கடைசியாக இடித்த மிளகு ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
  3. பின் இதனுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சறிது நறுக்கி இதையும் சேர்த்து நனாகு கலந்து கொண்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.மாவு எப்பொழுதும் உள்ள மாவு போல் இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் பதத்திற்கு இருக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின் ஒரு 15 நிமிடங்கள் மாவை நன்கு ஊற விடுங்கள் பின் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
  5. தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்துக் கொள்ளுங்கள் மாவு தண்ணீராக இருந்தால் தான் ஓட்டைகளுடன் மொறு மொறுப்பான ரவா தோசை வரும்.
  6. அதன் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் நன்றாக சூடு ஏறியதும் மாவு எடுத்து ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த ரவா தோசை வேக சிறிது நேரம் ஆகும் ஆகையால் 3 நிமிடங்கள் கழித்து தோசை நன்றாக வெந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ரவா தோசை தயாராகிவிட்டது.