பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ருசியான கோதுமை மாவு கப் கேக் இப்படி செய்து கொடுங்க!

Summary: வழக்கமாக கேக், பிரெட் போன்றவற்றை நாம் கடைகளில் அல்லது பேக்கரியில் இருந்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாமே சுவையாக வீட்டில் கேக் செய்யலாமா? கேக்கை வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மார்பில், சாக்லேட் என்று பல விதங்களில் செய்யலாம். அதே போல் கப் கேக், புட்டிங் கேக் என்று இன்னும் பல விதங்களாக செய்ய முடியும். கேக்குகள் தயாரிக்க பல வழிகள் உள்ளன, அவை முக்கியமாக அதில் சேர்க்கப்படும் சுவைகள் மற்றும் பொருட்கள் வேறுபடுகின்றன. அத்தகைய மாறுபாடுகளில் ஒன்று கோதுமை கேக் ஆகும்.

Ingredients:

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/2 கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • 1/2 கப் சூடான தண்ணீர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை
  • 1/2 சிட்டிகை உப்பு
  • 1/2 கப் உலர் திராட்சை

Equipemnts:

  • 1 வபவுள்
  • 1 ஓவன்
  • 1 சல்லடை

Steps:

  1. ஒரு பவுளில் மிதமான வெந்நீர் ஊற்றி சர்க்கரையை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும்.
  2. பிறகு ஆலிவ் ஆயில், வெனிலா எசன்ஸ், எலுமிச்சை பழச்சாறு ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது சல்லடையில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, உப்பு இவற்றை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.
  4. இப்பொழுது கலந்து வைத்துள்ள தண்ணீரில் மாவை சேர்த்து லேசாக கலந்து ஒரு கப்பில் ஊற்றவும்.
  5. பின்னர் அதன் மேலாக கருப்பு திராட்சை அலங்கரித்து 170 டிகிரி செல்சியஸில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
  6. அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை கேக் தயார்.