மலிவான விலையில் கிடைக்கும் தர்பூசணி வைத்து சுவையான அல்வா இப்படி செய்து பாருங்க!

Summary: அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும் அப்படித்தான் மிகவும் சுவையான ஒரு அல்வா தான் அதுவும் தர்பூசணி அல்வா. நாம் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டிருப்போம் ஆனால் அதில் உள்ள சதைப் பகுதியை பயன்படுத்தி அல்வா செய்திருக்க மாட்டோம். இதை செய்ய நீங்கள் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.

Ingredients:

  • 200 கிராம் தர்பூசணி
  • 100 கிராம் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 10 முந்திரி
  • 50 மிலி நெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. தர்பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. இப்பொழுது தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு பிறகு கார்ன் பிளார், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  6. அது இப்பொழுது நன்கு கெட்டியான அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கிளறி வைக்கவும்.
  7. அவ்வளவுதான் மாறுதலான தர்பூசணி அல்வா ரெடி.