ருசியான பள்ளிபாளையம் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!!

Summary: அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பள்ளிபாளையம் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 300 gm சிக்கன்
  • 7 மிளகாய் வற்றல்
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 கருவேப்பிலை
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp இஞ்சி
  • 5 பூண்டு
  • ¼ cup தேங்காய் சில்
  • ½ tsp கடுகு
  • தேவையான அளவு தண்ணீர்
  • நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. பள்ளிபாளையம் சிக்கன் செய்ய முதலில் சிக்கனை மஞ்சள்தூள் கலந்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.வற்றலை உள்ளே உள்ள விதையை தனியே வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. மிக்ஸி ஜாரில் இஞ்சி,பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் கருவேப்பிலையை போட வேண்டும்.
  3. தனியே எடுத்து வைத்துள்ள மிளகாய் வற்றலை சேர்க்க வேண்டும்.பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
  4. சின்ன வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் சிக்கனை அதில் சேர்க்க வேண்டும்.கலவைக்குத் தேவையான உப்பை சேர்க்க வேண்டும்.
  5. சிக்கனுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை மூடி வைக்க வேண்டும்.சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்ச் சில்லை அதில் சேர்க்க வேண்டும்.இப்பொழுது சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.