வாயில் வைத்தால் கரையும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Summary: நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இப்படி விநாயகருக்கு பிடித்த உணவும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவான கொழுக்கட்டைகள் இந்தியா முழுவதும் 21 வகைகளில் செய்யபட்டு வருகின்றனர். அதில் பால் கொழுக்கட்டையும் ஒன்றாகும். இன்று நாவிற்கு ருசியான பால் கொழுக்கட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் அரிசி மாவு
  • ¼ கப் துருவிய தேங்காய்
  • 1 tbsp சர்க்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • சூடான தண்ணீர்
  • 3 கப் தேங்காய் பால்
  • ½ கப் சாதாரண பால்
  • 1 tbsp கொழுக்கட்டை மாவு
  • ¾ கப் சர்க்கரை
  • ¼ tbsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு கப் அரிசி மாவு பெரிய பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு அதனுடன் கால் கப் துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் நாம் கலந்த இந்த மாவு கலவையில் ஒரு டீஸ்பூன் அளவு மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின்பு தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் சிறிது சிறிதாக தண்ணீரை பவுளில் சேர்த்து கரண்டியை வைத்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள் மாவு உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
  3. மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அப்போதுதான் கொழுக்கட்டை நன்றாக உள்ளே வேகும். அதன் பின்பு தேங்காய் அரைத்து எடுக்கும் முதல் கப் பாலை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. அதன் பிறகு இரண்டு கப் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தேங்காய் பாலும் மற்றும் அரை கப் சாதாரண பால் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் உருண்டை பிடித்து வைத்த கொழுக்கட்டைகளையும் சேர்க்கவும்.பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் முக்கால் கப் சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  5. பின்பு ஒரு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொண்டு பால் நன்றாக கொதித்து வந்ததும் நாம் வைத்திருக்கும் கெட்டியான ஒரு கப் தேங்காய் பாளையம் ஒரு டீஸ்பூன் கொழுக்கட்டை மாவையும் மற்றும் கடைசியாக சிறிது ஏலக்காய் தூள் தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விடவும் சுவையான பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது.