ருசியான வெஜ் பன்னீர் இட்லி, இப்படி செஞ்சி பாருங்க இதன் சுவை அட்டகாசமா இருக்கும்!!

Summary: நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் வெஜ் பனீர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இதில் காய்கறிகள் அதிகமாக போட்டு செய்வதனால் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.

Ingredients:

  • 200 கிராம் பனீர்
  • 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல்
  • 2 கேரட்
  • 1 தேக்கரண்டி புதினா இலை
  • 1 தேக்கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி கெட்டி தயிர்
  • உப்பு
  • நெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பனீரை மிக்ஸியில் போட்டு மாவு போல (தண்ணீர் சேர்க்காமல்) அரைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும், அத்துடன் அரைத்த பனீரை சேர்த்து, கெட்டி தயிர், உப்பு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றிக் கடுகு அறிவேப்பிலை, பச்சை மிளகாய், புதினா இலை, கேரட்- பெருங்காயம் சேர்த்து வதக்கி, அவற்றை பனீர் கலவையில் கலந்து கொள்ளவும், ஒரு இட்லி பாத்திரத்தில் நெய் தடவி இட்லி போல வேக வைத்து எடுக்கவும்.
  4. சுவையான வெஜ் பனீர் இட்லி தயார் ! .