டின்னர்க்கு ருசியான உருளை கிழங்கு சப்பாத்தி ரோல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரிய வேலை. அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மட்டும் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த சப்பாத்தி ரோல் குழந்தைகளுமே சாப்பிடும் வகையில் ஒரு சுவையான உணவு தான். இந்த உருளை சப்பாத்தி ரோலை மைதா மாவை வைத்து தான் செய்வார்கள், ஆனால் இந்த மைதா உடம்பிற்கு அத்தனை ஆரோக்கியமானது இல்லை என்பதால் கோதுமை மாவை வைத்து அத்துடன் உருளை சேர்த்து குழந்தைகளுக்கு நல்ல ஒரு சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான ஒரு காலை உணவாக இந்த உருளை சப்பாத்தி ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • சுடான தண்ணீர்
  • நெய்
  • உப்பு
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 Tsp மஞ்சள் தூள்
  • 1/2 Tbsp மிளகாய் தூள்
  • 1/2 Tsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 Tbsp எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 தோசைக்கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, நோலை உரித்து மசித்து வைத்துக்கொள்ளவும். பின் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பின் நறுக்கிய கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின் அனைத்தும் நன்கு வதக்கி வந்ததும்.
  4. மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலை வாசனை போகும் வரை நன்கு கிளறி விட வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
  5. அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக தேய்த்து நெய் சேர்த்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
  6. இறுதியில் இந்த சப்பாத்திகளின் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதனை சுருட்டி பரிமாற வேண்டும். வேண்டுமெனில் உருளைக்கிழங்கு மசாலா வைத்த பின், அதன் மேல் தக்காளி சோஸ் ஊற்றி சுருட்டி பரிமாறலாம்.