ருசியான மகாராஷ்ட்ரா ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க கமகமனு இருக்கும்!

Summary: இன்று நாம் ஒரு சுவையான மகாராஷ்ட்ரா முட்டை கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போறோம். என்னனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கீங்களா. இதை உங்க கிட்ட பகிர்ந்துக்கலான எனக்கு தூக்கமே வராது நண்பர்களே. முட்டை கிரேவியை நாம எப்படி செய்வோம். ஒன்னு முட்டையை வேக வைத்து செய்வோம். இல்லனா ஓடச்சு உத்தி செய்வோம். ஆனால் இந்த மகாராஷ்ட்ரா முட்டை கிரேவியை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் நண்பர்களே. அடிக்கடி கண்டிப்பா செய்வீங்க. ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த சுவையான கிரேவியை உங்கள் வீட்டில் உள்ளவர்களை அடிக்கடி செய்ய சொல்லி சாப்பிடுவங்க.

Ingredients:

  • 4 முட்டை
  • 2 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 10 முந்திரி பருப்பு
  • 3 வர மிளகாய்
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • பட்டை
  • கிராம்பு
  • 1 Tsp சீரகம்
  • 1 Tsp மிளகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 Tsp மிளகாய் தூள்
  • 1 Tsp தனியா பொடி
  • 1/4 Tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • மல்லி இலை
  • 1 பாலாடை கட்டி
  • 10 முந்திரி பருப்பு
  • 3 வர மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மிக்ஸி ஜாரில் 2 தக்காளி, 6 பல் பூண்டு, ஊற வைத்த 10 முந்திரி பருப்பு, 3 வர மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, சீரகம், மிளகு சேர்த்து நன்கு பொறிய விடவும்.பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி, முந்திரி பருப்பு, பூண்டு, வர மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  4. மிளகாய் தூள், தனியா பொடி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. எடுத்து வைத்த 4 முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முட்டையை கலக்க கூடாது. முட்டை வெந்ததும் மல்லி இலை தூவி விட்டு.
  6. அதற்கு மேல் பாலாடைகட்டியை துருவி அதை சாரல் மழை போல தூவி விட்டு பரிமாறினால் அதன் சுவை ஆஹா ஓகோ தான்.