ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சுவையான கோடைக்கால சாலட் இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க!!

Summary: கோடையில் கொளுத்தும் வெயில் நாம் அதிகமாக நீர் சத்துள்ள காய் கறிகளை உட்கொள்ள வேண்டும். அவ்வகையில் நாம் காலை உணவாக இந்த நீர்சத்து நிறைந்த சத்தான சாலட் சாப்பிட்டால். அந்நாள் முழுவதற்கும் உடலுக்கு தேவைப்படும் நீர் சந்து கிடைத்து விடும். அரோக்கியம் மட்டுமன்றி ருசியும் நிறைந்து இருக்கும். வாருங்கள்,இதை அப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Ingredients:

  • 50 கிராம் வெள்ளரிக்காய்
  • 50 கிராம் முளைக்கட்டிய பச்சை பயறு
  • 50 கிராம் குறைந்த கொழுப்புள்ள தயிர்
  • 5 கிராம் நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு
  • மிளகுத் தூள்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பௌலில் நறுக்கிய வெள்ளரிக்காய், முளைக்கட்டிய பச்சை பயறு, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் காய்கறிகள் தயிருடன் ஒன்று சேரும் வகையில் நன்கு பிரட்டி விட வேண்டும்.
  3. பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்து, பின்கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெடி!!