குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிவாங்கியின் முள்ளங்கி மலாய் குல்பி இப்படி செய்து பாருங்க!

Summary: கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், பலரும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புவோம். அதுவும் குழந்தைகள் குல்பி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். நீங்களும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், முள்ளங்கியை கொண்டு குல்பியை செய்து சாப்பிடுங்கள்.

Ingredients:

  • 1/2 லிட்டர் பால்
  • 1 டீஸ்பூன் குங்குமப்பூ
  • 1/2 கப் சர்க்கரை
  • 10 நறுக்கிய பாதாம், பிஸ்தா
  • 2 டேபிள் ஸ்பூன் இனிப்பில்லா
  • 1 சிகப்பு முள்ளங்கி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 4 குச்சி ஐஸ் மோல்டு

Steps:

  1. முதலில் முள்ளங்கியை தோல் சீவி கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும்.
  2. பின்னர் துருவிய முள்ளங்கியை சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் முள்ளங்கியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  4. முள்ளங்கி வெந்ததும் அடுப்பை அணைத்து நன்கு தண்ணீரை வடி கட்டி கொள்ளவும்.
  5. பின்னர் ஒரு கடாயில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சி அது பாதி அளவு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
  6. நன்றாக கொதிப்பதற்கு குறைந்தது 8 நிமிடம் ஆகும். ஆகையால் நன்றாக கொதித்து பாதியளவு வந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. பின்பு அதில் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்பு அதன் நிறம் சந்தன நிறமாக மாறும். இன்னும் சிறிதளவு பால் கெட்டியாக மாற வேண்டும்.
  8. பிறகு பால் கெட்டியானவுடன் அதில் கோவா, முள்ளங்கி மற்றும் நறுக்கிய பாதாம் பிஸ்தாவை சேர்த்து கலந்து விடவும்.
  9. அவை சேர்த்ததும் பால் இன்னும் கெட்டியாக ஆரம்பிக்கும். இந்நிலையில் அடுப்பை அனைத்து விட்டு நன்றாக ஆறவிடவும்.
  10. பின்பு குல்பி மோல்டில் அல்லது சிறிய டம்ளரில் அக்கலவையை சேர்த்து ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை அதனுடன் குத்தி பிளாஸ்டிக் கவர் அல்லது அலுமினிய ஃபாயில் சேர்த்து நன்றாக கட்டி வைக்கவும்.
  11. ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைத்து வெளியே எடுத்தால் சுவையான மலாய் குல்பி தயார்.