நாம் கீரில்டு சிக்கனுடன் சாப்பிடும் மையோனைஸ் எப்படி செய்வது ?

Summary: கீரில்டு சிக்கன், தந்தூரி சிக்கன் மற்றும் பொறித்த கோழி இது போன்ற சிக்கன் வகைகள் மக்களிடையே பிரபலமாக உள்ளது. இந்த உணவுகள் சாப்பிடும் பொழுது இதனுடன் சிக்கனை தொட்டு சாப்பிடுவதற்காக மையோனைஸ் கொடுப்பார்கள் நாம் அதை தொட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். நாம் ஹோட்டலில் இருந்து சிக்கன் பார்சல் வாங்கும் பொழுது அவர்கள் கொடுக்கும் மையோனைசின் அளவு கம்மியாக இருக்கும் ஆனால் அதே மையோனைஸ் எளிதான முறையில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம். ஆம் இன்று மையோனைஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 2 முட்டை மஞ்சள் கரு
  • ¼ tbsp கடுகு
  • 200 ML எண்ணெய்
  • ¼ tbsp மிளகுதூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp வினிகர்
  • ½ tbsp உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 3 பவுள்
  • 1 முட்டை கலக்கும் கரண்டி

Steps:

  1. முதலில் மையோனைஸ் செய்வதற்காக நம்ம எடுத்துள்ள கடுகை நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய பவுளில் முட்டையின் வெள்ளை கருவை நீக்கிவிட்டு அதன் மஞ்சள் கருவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின் அந்த மஞ்சள் கருவை முட்டை கலக்கும் கரண்டியைக் கொண்டு நன்றாக அடித்துக் கொண்டே இருங்கள். இப்படியாக ஒரு நிமிடம் அடித்துக் கொண்டு பின்பு இதனுடன் நாம் இடித்து வைத்துள்ள கடுகு பொடியை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
  3. பின் நாம் எடுத்து வைத்திருக்கும் எண்ணெயை முழுவதும் அப்படியே சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து அடித்துக் கொண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது எண்ணெய் சேர்த்து விட்டு நன்கு அடித்து அந்த எண்ணெய் முட்டையுடன் கலந்ததும் மறுபடியும் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  4. இந்த முறையில் முட்டையுடன் எண்ணெயை சேர்த்து நன்றாக அடித்துக் கலந்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் வினிகர், உப்பு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் மிளகுத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
  5. இப்போது முட்டையின் மஞ்சள் நிறம் மாறி வெள்ளை நிற வர ஆரம்பித்து விடும் அதன் பின்பு மறுபடியும் என்னையை ஊற்றிக் கொண்டே முட்டையை அடிக்க ஆரம்பித்து கொள்ளுங்கள். இப்படியாக நாம் எடுத்த 200 ml எண்ணெய் ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மையோனைஸ் இனிதே தயாராகிவிட்டது.