தித்திக்கும் சுவையில் அரிசி ஹல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வயித்தவுடன் கரையும்!

Summary: தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 2 கப் பொடிசெய்த வெல்லம்
  • 10 முந்திரி
  • 4 ஏலக்காய்
  • 100 கிராம் நெய்
  • 1 சிட்டிகை கலர் பொடி
  • 1 சிட்டிகை உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் அரிசியை வாணலியில் சிவக்கும் வரை வறுத்து எடுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
  2. அடுத்து முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு ஏலக்காயை வறுத்து பொடித்து கொள்ளவும்
  3. அரிசி மாவை சிறிது நெய் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
  4. பிறகு 4 கப் தண்ணீரில் ஏலக்காய், உப்பு மற்றும் கலர் பொடியை கலந்து ஒரு வாணலியில் ஊற்றி கொதி வந்ததும் அரிசி மாவை அதில் போட்டு கை விடாமல் கிளறவும்.
  5. பின்பு அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை போட்டு கிளறவும். பிறகு மீதமுள்ள நெய்யை அதில் ஊற்றி கிளறவும்.
  6. வாணலியில் ஒட்டாமல் வரும் போது முந்திரியை அதில் போட்டு கிளறி விட்டு இறக்கி விடவும்.