நமது பாரம்பரிய பலகாரமான ருசியான சுசியம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: தற்சமயம் நம் பாரம்பரிய பலகாரங்களில் இருந்து சில பலகாரங்கள் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. குறைந்து கொண்டே வருகிறது என்பதைவிட நாம் தொலைத்து விட்டு வருகிறோம் என்பதை நிசப்தமான உண்மை அப்படி நாம் தொலைத்து வரும் ஒரு பலகாரம் தான் சுசியம் உள்ள இனிப்பு பூரண வைத்து வெளியே மொறுமொறுப்பு தன்மை உடன் இருக்கும் இந்த சுசியமும் படிப்படியாக மறைந்து கொண்டே தான் வருகிறது. ஆகையால் வருகிற தீபாவளி பண்டிகைக்கு இந்த சுசியத்தை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.

Ingredients:

  • 1 கப் கடலை பருப்பு
  • 2 ½ கப் தண்ணீர்
  • 1 கப் வெல்லம்
  • ½ மூடி துருவிய தேங்காய்
  • 2 tbsp நெய்
  • 1 கப் அரிசி மாவு
  • 1 டம்பளர் உளுந்த மாவு
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு பெரிய பவுளில் ஒரு கப் இட்லி அரிசியும் அதனுடன் ஒரு டம்ளர் உளுந்தம் பரப்பும் சேர்த்து இரண்டையும் கலந்து கொண்டு இருமுறை தண்ணீர் வைத்து அலசிக் கொள்ளுங்கள். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு பூரணம் செய்வதற்கு ஒரு குக்கரில் ஒரு கப் கடலை பருப்பை சேர்த்து அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து முன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பிறகு முன்று விசில் வந்தவுடன் குக்கரில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை கப் துருவிய வெல்லத்தை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு செய்து கொள்ளுங்கள். பின்பு வெல்ல பாகுவை வடிகட்டி வைத்து தனியாக ஒரு பவுளில் வடிகட்டிய பாகுவை வைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அரை மூடி தேங்காய் துருவலை அதில் சேர்த்து நன்கு வறுக்கவும். தேங்காய் நன்கு வறுப்பட்டு மணம் வரும் பொழுது நாம் அரைத்து வைத்த கடலைப்பருப்பையும், வெல்ல பாகுவையும் இதனோடு சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
  6. பின்பு பூரணம் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கடாயை கீழே இறக்கி குளிர வைத்து உங்களுக்கு தேவையான அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். பின் நாம் ஏற்கனவே ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறுது தண்ணீர் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  7. பின் மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து சுசியம் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பூரண உருண்டையை அரிசி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பாரம்பரிய பலகாரம் சுசியம் இனிதே தயாராகிவிட்டது.