ருசியான ப்ரோக்கோலி பீன்ஸ் கூட்டு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்!!

Summary: நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக இருந்தால், இந்த ப்ராக்கோலி பீன்ஸ் கூட்டை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

Ingredients:

  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1/2 கப் கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கப் பீன்ஸ்
  • 2 கப் ப்ரோக்கோலி
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு
  • 1/4 கப் கொத்தமல்லி
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை
  • 4 டேபிள் ஸ்பூன் தனியா
  • 2 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 5 வர மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. ப்ரோக்கோலி தண்டுகளின் தோலை‌ நீக்கி சின்னதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் பீன்ஸ் இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து பவுளில் தனியாக எடுத்து வைக்கவும்.
  3. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  4. வறுத்த பொருட்களை 1 கப் நீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  5. இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  6. பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. வெங்காயம் சிறிது நிறம் மாறினதும் ப்ரோக்கோலி சேர்த்து 4 நிமிடம் வதக்கவும். பின் 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  8. பின்னர் வேகவைத்த பீன்ஸ் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி 3 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. அவை கொதித்ததும் நாம் அரைத்து வைத்துக் வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி 3 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்துக் கிளறவும்.
  10. இரண்டு கொதி வந்ததும், உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். மேலே கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
  11. அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் ப்ரோக்கோலி கூட்டு தயார். சாதம், சப்பாத்தி, நான், பரோட்டா அல்லது தோசை கூட சேர்ந்து சாப்பிடலாம்.