ருசியான சேலம் பீன்ஸ் சுக்கா இப்படி செய்து பாருங்க! கையேத்தி பவன் ஸ்டைல் உணவு!!

Summary: இந்த வாரம் உங்கள் வீட்டில் பீன்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் பீன்ஸை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சேலம் ஸ்டைல் பீன்ஸ் சுக்காவை செய்து கொடுங்கள். சுக்கா தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் கிராமப்புற பகுதிகளில் இவை கிடைக்காத ஹோட்டல்கள் மற்றும் கையேந்தி உணவு கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது. இதனின் சிறப்பு என்னவென்றால் இதை செய்வதற்கு வெகு நேரம் ஆகாது மேலும் கடினமான செய்முறையும் கிடையாது.

Ingredients:

  • 6 கப் பீன்ஸ்
  • 1 கப் நறுக்கிய
  • உப்பு
  • 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 பட்டை
  • 4 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 வர மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 4 பல் பூண்டு
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கப் நறுக்கிய தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 கப் கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் வெங்காய பூண்டு பேஸ்ட் செய்வதற்கு மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, சீரகம், தனியா, கறிவேப்பிலை, ஏலக்காய், மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  3. அவற்றை எடுத்து ஆறவைத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  4. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு பிரவுன் ஆகும் வரை வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, வெங்காய பூண்டு தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. பின்னர் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் ஒரு மூடி போட்டு 10-15 நிமிடங்கள நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
  7. பீன்ஸ் வதங்கியதும் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  8. அவ்வளவுதான் சுவையான, ருசியான பீன்ஸ் மசாலா தயார். இதனை சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்.