மொறு மொறுப்பான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி ?

Summary: பிரியாணி, கிரேவி மற்றும் குழம்பு என சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தி நாம் செய்யும் உணவுகளுடன் பொரித்த சிக்கனை நாம் தயார் செய்து சாப்பிடுவது பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் 65, போன்லெஸ் தயார் செய்து சாப்பிடாமல். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் சிக்கன் லாலிபாப் உங்கள் வீட்டிலேயே எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். இப்படி நீங்கள் சிக்கன் லாலிபாப் செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையால் இன்று மொறு மொறுப்பான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ KG சிக்கனா லாலிபாப்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • ½ tbsp உப்பு
  • 6 tbsp கான்பிளவர்
  • 2 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 tbsp சோயா ஜாஸ்
  • 2 tbsp மைதா மாவு
  • 1 tbsp மிளகுதூள்
  • 2 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 முட்டை
  • 1 சிட்டிகை கலர் பொடி

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 பெரிய தட்டு
  • 2 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சிக்கன் லாலிபாப் செய்வதற்கு தேவையான அளவு சிக்கன் வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் அருகில் உள்ள சிக்கன் கடையில் முதலிலேயே தேவையான அளவிற்கு சிக்கன் லாலிபாப் வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் அவர்கள் தயார் செய்து வைத்து விடுவார்கள்.
  2. அதன் பின்பு வாங்கி வந்த சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் வைத்து அலசிக்கொண்டு பிறகு தனியாக ஒரு பவுளில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பெரிய தட்டில் தேவையான அளவு கான்பிளவர் மாவு, மைதா மாவு, மிளகுத்தூள் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
  3. அதன் பிறகு இதனுடன் தேவையான உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நான்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் அரை எலும்மிச்சை பழம் சாறு மற்றும் சோயா ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள்.
  4. இனி இதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு சிட்டிகை கலர் பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் சிக்கன் வைத்துள்ள பாத்திரத்தில் மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு அரை மணி நேரங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் இதுபோல் நீங்கள் சிக்கன் லாலிபாப் செய்தால் மொறுமொறுப்பாக அட்டகாசமான சுவையில் இருக்கும்.