ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த உளுந்து களி இப்படி வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிட்டு பாருங்க!

Summary: உளுந்துகளி , இது ஒரு சத்தான உணவு. பாரம்பரியமா பாட்டி ,நம்ம அம்மா செய்து குடுத்த சுவையும் ஆரோக்கியமும் கொண்ட உணவு.சிரயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த உணவு. இடுப்பு எலும்பு வலுப்பெற இந்த உளுந்து காளி மிகவும் உதவும்.மகப்பேறு பெற்ற தாய், மாத விடாய் பொழுதும் இந்த உளுந்தங்களி இந்த ஆரோக்கியம்தரும் உணவை உண்ணலாம். இது நல்லெண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 200 கிராம் உளுந்து
  • 50 மில்லி நல்லெண்ணெய்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 சிட்டிகை ஏலக்காய்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெள்ளை உளுந்தை பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுக்கவும்.இது ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை நன்றாக சலித்து கொள்ளவும்.
  2. பின்னர், அடுப்பை பற்ற வைத்து எண்ணையை ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும், வறுத்து வைத்த உளுந்தம் மாவை சேர்த்து ,இடைவெளி இல்லாமல் கிளறிவிடவும், மூணு அல்லது நாலு நிமிஷத்தில் உளுந்து இறுகி விடும்.
  3. உளுந்து மாவு நன்கு வெந்தவுடன் , நாட்டு சர்க்கரை சேர்த்து ,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து , ஒரு சிட்டிகை ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.
  4. நன்கு உருண்டு திரண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும். நன்கு திரண்டு வந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து இறக்கிவிடவும். பாரம்பரிய சுவையில் உளுந்தங்களி தயார்.!!!