Summary: சூடான சாதத்துடன் துவையல் இருந்தால் நமக்கு ஒரு குண்டான் சாதம் இருந்தால் கூட பத்தாது. பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். எனவே அதற்கு சற்று வித்தியாசமாக இந்த வெண்டைக்காய் துவையல் செய்வது பாருங்கள். இது செய்வது மிகவும் சுலபம். சிலருக்கு வெண்டைக்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. அவர்களுக்கான ரெசிபி தான் இது. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், திரும்பத் திரும்ப செய்யும் அளவிற்கு ஆர்வம் உண்டாகும்.