மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான கீரை பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் ருசியே தனி தான்!!

Summary: டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுட சுட கீரை பக்கோடா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.எப்படி இந்த பக்கோடா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கை பிடி கீரை
  • 1 வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், மற்றும் கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மற்றும் தேவையான அளவு உப்பு, வதக்கிய கீரை, மிளகு, சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.
  4. அடுத்து பொரிக்க தேவையான அளவு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீரையை கிள்ளி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
  5. இப்பொழுது சுவையான கீரை பக்கோடா தயார்.