கிராமத்து இனிப்பு பனியாரம் செய்வது எப்படி ?

Summary: இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள்.இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு வெல்லம் கொண்டு செய்த பனியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று இனிப்பு பனியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 100 ML நெய்
  • 1 கப் பச்சரிசி
  • ¾ கப் வெல்லம்
  • ½ கப் தண்ணீர்
  • 5 ஏலக்காய்
  • 1 pinch உப்பு
  • 2 வாழைப்பழம்
  • ¼ கப் தேங்காய் துண்டுகள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 பனியார கல்

Steps:

  1. முதலில் ஒரு கப் பச்சரிசியை ஒரு பவுளில் எடுத்துக்கொண்டு அதற்குத் தேவையான அளவு தான் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு ஒரு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அனுப்பி அதில் முக்கால் கப் வெல்லம் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு வெல்லம் உருகியதும் பாத்திரத்தை இறக்கி அரிப்பை வைத்து பாகுவை வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு இரண்டு மணி நேரங்கள் ஊறிய பச்சரிசி மாவை ஒரு ஈர துணியில பரப்பி 15 நிமிடங்கள் நன்கு உலர வையுங்கள். பின்பு அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஐந்து ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தும் நன்றாக மாவு போல் அரைத்து கொள்ளுங்கள்.
  4. பின்பு இதனுடன் இரண்டு வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். நாம் தயார் செய்துள்ள வெல்ல பாகுவை சிறிதளவு ஜாரில் சேர்த்துக் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
  5. பின் அரைத்த மாவை தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு அதனுடன் மீதி இருக்கும் வெல்ல பாகுவையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இப்போது பனியாரத்திற்கு மாவு தயாராகிவிட்டது இது ஒரு எட்டு மணி நேரம் நன்றாக புளிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின்பு மாவு நன்றாக புளித்ததும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள் நெய் நன்றாக உருகி காய்ந்ததும் அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பின் வறுத்த தேங்காய் துண்டுகளை மாவோடு சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்.
  7. பின் பனியார கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் குழியில் சிறிதாக நெய் விட்டு குழிக்குள் தேவையான அளவு மாவை ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான இனிப்பு பனியாரம் தயாராகி விட்டது.