குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்த ருசியான ஓரியோ பிரவுனி இப்படி செய்து பாருங்க!

Summary: பண்டிகை என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். இந்த பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். இவை சதுர, செவ்வக மற்றும் வட்ட வடிவிலும் செய்யப்படுகின்றன.

Ingredients:

  • 5 ஓரியோ பிஸ்கட்
  • 1/4 கப் பால்
  • 1 முட்டை
  • 1/4 சிட்டிகை உப்பு
  • 25 கிராம் வெண்ணெய்
  • 50 கிராம் டார்க் சாக்லெட்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 கப் கோகோ
  • 1/2 கப் மைதா மாவு

Equipemnts:

  • 1 ஓவன்
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் ஓரியோ பிஸ்கட்டை எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பவுளில் முட்டை, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும் அதன் மேல் ஒரு அகன்ற பாத்திரம் வைத்து அதில் நறுக்கிய சாக்லெட் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
  4. வெண்ணெய் மற்றும் சாக்லேட் நன்கு உருக வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சாக்லேட் மற்றும் வெண்ணெய் கலவையை ஊற்றவும். அதில் மைதா மாவு, கோகோ பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் அந்த கலவையில் நாம் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  7. பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஓரியோ குக்கீகளைச் சேர்த்து மாவை நன்கு கலக்கவும்.
  8. பின் ஒரு நெய் தடவிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.
  9. பின்னர் அதனை 170°C வெப்பநிலையில் ஓவனில் வைத்து 25 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
  10. அவ்வளவுதான் சுவையான ஓரியோ பிரவுனி தயார். தயாரான பிரவுனி மேலே சிறிதளவு பிஸ்கட் துண்டுகளை தூவி பரிமாறவும்.