காரசாரமான ருசியில் வாழைக்காய் சிப்ஸ் இனி இப்படி செய்து பாருங்க! அசத்தலான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!!

Summary: வாழைக்காய் சிப்ஸ் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.எப்படி செய்வதென்று கீழே ஒதுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 வாழைக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • ½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். வாழைக்காயின் தோலை சீவி வைக்கவும்.
  2. அதனை இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக வைக்கவும்.
  3. அடுத்து அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக நறுக்கி தூள் வகைகளை சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
  4. பிறகு ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்த வாழைக்காய்களை போட்டு வறுத்து எடுக்கவும்.
  5. சுவையான வாழைக்காய் சிப்ஸ் தயார்.