டீ, காபியுடன் சாப்பிட ருசியான கொள்ளு பிஸ்கெட் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான செய்முறைகளில் செய்யலாம். கொள்ளு பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடைய சுவையும், மணமும் எல்லோரையும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ண வைக்கும். குழந்தைகளுக்கு சத்தான இந்த கொள்ளு பிஸ்கட்டை செய்து, பள்ளிக்கும் சிற்றுண்டி உணவாகக் கொடுத்து விடலாம்.

Ingredients:

  • 3/4 கப் கொள்ளு
  • 1/4 கப் கோதுமை
  • 3/4 கப் சர்க்கரை
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் வெறும் வாணலியில் கொள்ளு பருப்பு சேர்த்து வறுத்து, ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  2. பின் பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் நாட்டு சர்க்கரையை ஒவ்வொன்றாக சலித்து சேர்க்கவும்.
  3. பின் இதனுடன் அரைத்த கொள்ளு மாவு சேர்த்து சலித்து கலந்து வைத்துக் கொள்ளவும். மாவுடன் எண்ணெய் சேர்த்து கலந்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. இதனுடன் தண்ணீர் கொஞ்சமாக தெளித்து புட்டு பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு சிறிய மூடியில் இந்த மாவை ஸ்பூனால் நிரப்பி எண்ணெய் தேய்த்து பட்டர் பேப்பர் போட்ட தட்டில் தலை கீழாக திருப்பி ஸ்பூனால் ஒரு தட்டு தட்டினால் வட்டம் தட்டில் உடையாமல் விழும்.
  6. மீதியிருக்கும் மாவையும் இப்படி செய்து வைத்துக் கொள்ளவும்.
  7. பின் ஒரு கடாயில் கீழே ஒரு அகன்ற பாத்திரம் வைத்து அதன் மேல் வட்டங்கள் அடுகிய தட்டை வைக்கவும்.
  8. 20 நிமிடங்கள் கழித்து பின் ஏதேனும் ஒரு பிஸ்கட் வட்டத்தை திருப்பி பார்த்து லேசான பிரவுன் கலர் வந்ததும் எடுத்து விடலாம். பிஸ்கட் ஆறியதும் நன்றாக இருக்கும்.
  9. அவ்வளவு தான். சுவையான கொள்ளு பிஸ்கெட் ரெடி. இந்த பிஸ்கட்டை மாலை வேளையில் டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.