ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ருசியான கார்ன் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: கிரீம் அல்லது ஆடம்பரமான பொருட்கள் இல்லாமல் எளிதான முறையில் கார்ன் சூப் தயாரிக்கலாம். கார்ன் சூப்பிற்கான செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் சில நிமிடங்களில் தயாரிக்கலாம். இன்னும் இது ஆரோக்கியமான சூப் ரெசிபிகளில் ஒன்றாகும், ஏனெனில் இது புதிய கார்ன் மற்றும் பிற காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது. சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் கார்ன் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது.

Ingredients:

  • 1 கப் ஸ்வீட் கார்ன்
  • 1/4 கப் பீன்ஸ்
  • 1/4 கப் காரட்
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவு
  • 1/2 டீஸ்பூன் வெண்ணெய்
  • கொத்தமல்லி இலை
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் பொடியாக நறுக்கிய பீன்ஸ் கேரட் சோளம் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் ஒரு ஸ்பூன் தனியாக சோளத்தை எடுத்து மிக்சியில் அரைத்து அதனையும் சேர்த்து வதக்கவும்.
  4. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
  5. சோள மாவில் தண்ணீர் விட்டு கரைத்து அதனை சூப்பில் சேர்க்கவும்.
  6. பின்னர் மிளகு தூள் கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.