மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மசாலா சுண்டல் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Summary: மசாலா சுண்டல் இது போன்று சுவையை இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • ¼ கிலோ வெள்ளை சுண்டல்
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 5 பல் பூண்டு
  • 3 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • பட்டை
  • இஞ்சி
  • ½ டீஸ்பூன் கசகசா
  • கொத்தமல்லி
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் 5,6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, தேங்காய் எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அரைத்ததை ஊற்றி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  4. பின்பு மசாலா வாசனை வந்ததும் வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவவும்.
  5. இப்பொழுது சுவையான மசாலா சுண்டல் தயார்.