கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டு ப்ரை இப்படி செய்து பாருங்க! வீடே கமகமக்கும் ருசியும் அசத்தலாக இருக்கும்!

Summary: கமகமக்கும் நெத்திலி கருவாட்டு பொரியல் இப்படி ஒரு தரம் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போன்று செய்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த கருவாட்டு பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் நெத்திலி கருவாடு
  • 1½ கப் வெங்காயம்
  • 10 பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 டீபோன் கடுகு
  • எண்ணெய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. நெத்திலி கருவாட்டை ½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் பாத்திரத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அனைத்தும் நன்றாக வெந்து சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.