ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சௌசௌ பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!!

Summary: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, காரசாரமாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் சௌசௌ உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த சௌசௌ பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.

Ingredients:

  • 2 சௌசௌக்காய்
  • 1/2 கப் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி
  • 1 பெரிய
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1/4 கப் நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Steps:

  1. முதலில் சௌசௌ வை கேரட் துருவியில் சீவிக் கொள்ளவும்.
  2. பின்னர் அதனுடன் வெங்காயம் முதலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  3. சௌசௌ காயில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் தண்ணீர் தேவைப்படாது. தேவைப்பட்டால், 1ஸ்பூன் அளவு தெளித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின்னர் வாணலியில்‌ எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சிறு தூண்டுகளாக எடுத்து போட்டு மீடியும் தீயில் வைத்து பொரிக்கவும்.
  5. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரிக்கவும்.
  6. அவ்வளவுதான். சுவையான சௌ சௌ பகோடா தயார்.