காரசாரமான ருசியில் டிராகன் சிக்கன் இப்படி ஒரு முறை மட்டும் செய்து பாருங்க! இதன் சுவைக்கு உங்கள் நாக்கு அடிமை!!

Summary: சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன் ரெசிபிஸ் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு சென்றால் பெரும்பாலும் நாம் வீட்டில் சமைத்து சாப்பிடாத உணவுகளைத் தான் வாங்கி சாப்பிடுவோம். அப்படி ரெஸ்டாரண்ட் செல்லும் போது அநேக மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் சிக்கன் ரெசிபி என்றால் அது டிராகன் சிக்கனாகத் தான் இருக்கும். ஏனெனில் இதை நாம் அதிகம் வீட்டில் செய்து சாப்பிடமாட்டோம். ஆனால் இந்த டிராகன் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

Ingredients:

  • 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 1 பெரிய
  • 1 குடைமிளகாய்
  • 2 முட்டை 2
  • 2 டேபிள் ஸ்பூன் சோள
  • 3 டேபிள் ஸ்பூன் மைதா
  • 3 டேபிள் ஸ்பூன் சோயா
  • 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
  • 3 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி
  • 1/4 கப் தக்காளி
  • 1/4 கப் சிவப்பு மிளகாய் சாஸ்
  • 1/2 டீஸ்பூன் வறுத்த எள்
  • 4 வர மிளகாய்
  • 15 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. டிராகன் சிக்கன் செய்வதற்கு நீள்வாக்கில் வெட்டிய எலும்பில்லா சிக்கன் துண்டுகளை தான் பயன்படுத்துவார்கள்.
  2. நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளில் இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு கலந்து பின் முட்டை, சோயா சாஸ், வினிகர் சேர்த்து கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும்.
  3. பின் அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மீடியம் தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. பின்னர் மற்றொரு கடாயில் 3ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பூண்டு வரமிளகாய், முந்திரி சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பின் நீளமாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து கிளறவும். குடைமிளகாய் லேசாக வதங்கியதும், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் சாஸ் சேர்க்கவும்.
  6. பின் மிளகு தூள் சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் தண்ணீர் தெளித்து சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  7. பின்னர் பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
  8. சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். பின் மல்லிதழை சேர்த்து, கடைசியாக எள் தூவி பரிமாறவும்.
  9. அவ்வளவுதான். மிகவும் சாஃப்ட்-டான, இனிப்பும் காரமுமான டிராகன் சிக்கன் ரெடி.