காலை உணவுக்கு ருசியான வாழைத்தண்டு தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: தென்னிந்தியாவில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுளில் ஒன்று தோசை. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். சுவையாகவும், விரைவில் செய்து சாப்பிடும் அளவுக்கு இருக்கும். மேலும் இது ஒரு ஆரோக்கியமான உணவு. தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவரை நீங்கள் எத்தனையோ தோசைகளை செய்து சுவைத்திருப்பீர்கள். இந்த வாழைத்தண்டு தோசை சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1/2 துண்டு வாழைத்தண்டு
  • 3 கப் இட்லி மாவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • கறிவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 தோசை கரண்டி
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் வாழைத்தண்டுடை நார் எடுத்து கலர் மாறாமல் இருக்க மோரில் போட்டு மீண்டும் நார் இருந்தால் எடுக்கவும்.
  2. பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில், மோரில் நன்கு கழுவிய வாழைத்தண்டு அதனுடன் சீரகம், வரமிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த விழுதை இட்லி மாவில் சேர்த்து கலந்து பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும், ஒரு கரண்டி மாவை தோசையாக விரித்து விட்டு ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கவும்.
  5. அவ்வளவுதான். சுவையான வாழைத்தண்டு தோசை ரெடி. இந்த தோசைக்கு எல்லாவிதமான சட்னி மற்றும் சாம்பார் வகைகளும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.