Summary: கோடைகாலம் துவங்கி விட்டாலே முதலில் நம் நினைவிற்கு வருவது மாங்காய் தான். மாங்காய் வந்த பிறகு மாம்பழம் வர துவங்கும். கோடை காலத்தில் குழந்தை, பெரியவர் அல்லது வயது வித்தியாசம் இல்லாமல் யாரும் பார்க்கத் தயங்காத இடமாக கடற்கரை உள்ளது. பீச்சுக்கு போனாலே முதலில் கண்ணில் படுவது மாங்காய் மசாலா தான். அருமையாக நீள நீளமாக வெட்டி அதில் மாங்காய்க்கு தேவையான மசாலாவை தூவி பேப்பரில் மடித்து கொடுப்பார்கள். நம்மில் பலரும் கடற்கரைக்குச் சென்றால் அங்கு கடலின் அழகினை ரசிக்கிரோமோ இல்லையோ அங்கு உள்ள அனைத்து உணவுகளையும் சுவைக்க மறப்பதில்லை.