ரூசியான எலுமிச்சை ரசம் செய்வது எப்படி ?

Summary: சிக்கன் மற்றும் மட்டன் போன்ற செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதற்காக தான் இது போன்ற உணவை உட்கொள்ளும் போதும் நாம் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். எலுமிச்சை ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான எலுமிச்சை ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு குறித்த தொகுப்பில் காணலாம்.

Ingredients:

  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 2 கப் தண்ணீர்
  • 1  tbsp மிளகு
  • 1 tbsp சீரகம்
  • 4 பல் பூண்டு
  • 1 பழம் எலுமிச்சை சாறு
  • 2 கப் தண்ணீர்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 தக்காளி
  • 2 tbsp ரசப் பொடி
  • ½ tbsp மிளகாய் தூள்
  • 3 ½ tbsp உப்பு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 tbsp நெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • ¼ tbsp வெந்தயம்
  • 2 வர மிளகாய்
  • ½ tbsp பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 குக்கர்
  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு குக்கரை எடுத்து கொண்டு அதில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பின் பருப்பு வெந்ததும் குக்கரை இறக்கி பிரஷரை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள்.
  2. பின் பருப்பு வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்துக் கொண்டு பருப்பை நன்றாக மசித்து விட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் பருப்பு வேக வைத்த தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து விடுங்கள்.
  3. பின்பு ஒரு குழம்பு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, நசுக்கி ஒரு துண்டு இஞ்சி மற்றும் நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து நம் கரைத்து வைத்துள்ள தண்ணீரை கடாயில் சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய் தூளும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு ரசம் நன்றாக கொதித்ததும் நாம் மசித்து வைத்திருக்கும் பருப்பையும் இதனோடு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த பொருளையும் ரசத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  5. பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி நெய் நன்கு காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள் கடுகு பொரிந்து வந்தவுடன் சீரகம், வெந்தயம், வரமிளகாய், சிறிது பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து கொள்ளுங்கள்.
  6. பின் இந்த தாளிப்பையும் ரசத்துடன் சேர்த்து ஒரு கைப்பிடி நறிக்கிய கொத்தமல்லியும் ரத்தத்தில் சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின் ரசம் கொதித்து வரும் நிலையில் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் மிகவும் ருசியான எலுமிச்சை ரசம் இனிதே தயாராகிவிட்டது.