ஹோட்டலில் செய்யும் மொறு மொறு ரவா தோசையே வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: ஈசிரவா தோசை, விரைவாக தயாராகும் ஒரு உணவு வகை என்று  சொல்லலாம்.. ஆம், 15 நிமிடங்களில் நீங்கள் ரவா தோசையினை தயார் சேர்த்து சாப்பிட முடியும். இந்த பதிவில் ஈசி ரவா தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் மைதா மாவு
  • 3 பச்சை மிளகாய்
  • 1/4 கப் அரிசி மாவு
  • 2 கப் வறுத்த ரவா
  • இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 50 கிராம் முந்திரிப் பருப்பு
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவி கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சிறிய சிறிய துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவா, சீரகம், பொடித்த முந்திரி பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.
  3. இந்த மாவுக் கலவையை அரை மணிநேரம் ஊற வைக்கவும் தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை ஊற்ற வேண்டும்.
  4. தோசையைச் சுற்றி எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை. . இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த சைட் டிஷ்