சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான பச்சை பயிறு ரசம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: தென்னிந்திய மதிய உணவு மெனுவில் ரசம் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். உண்மையான செய்முறையில் ரசம் பொடி பயன்படுத்தப்படுகிறது ஆனால் கூடுதல் சுவைக்காக புதிதாக அரைத்த மசாலாவைப் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும். நார்த்தங்காய் ரசம் புளிப்பு, கசப்பு மற்றும் காரமான சுவை கொண்டது மற்றும் முற்றிலும் தவிர்க்க முடியாத மிகவும் சுவையான ரசம். பச்சை பயறு ரசம் சிறந்த சுவை மட்டுமல்ல, இந்த அழகான நிறத்தைக் கொண்டுள்ளது, இது நம் கண்களுக்கு சரியான விருந்தாகும்.

Ingredients:

  • 1/2 கப் பாசிப்பயறு
  • 1 தக்காளி
  • புளி
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மல்லி விதை
  • 1 வர‌ மிளகாய்
  • 8 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • 2 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 2 டீஸ்பூன் கடலை எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. பச்சை பயிறு வேக வைத்த தண்ணீர் மற்றும் வேக வைத்த பருப்பு 1/4 கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் மிக்சி ஜாரில் மிளகு, மல்லி, சீரகம், வரமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை லேசாக அரைத்து பின் பூண்டு, மல்லித்தழை சேர்த்து கொரொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
  5. பின் அரைத்த விழுது சேர்த்து கிளறி அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. பச்சை வாசம் போனதும் வேக வைத்த பச்சை பயிறு மற்றும் வடித்த தண்ணீர் சேர்க்கவும்.
  7. பயிறு வேக வைக்கும் பொழுது உப்பு சேர்திருப்பதால் இனி சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  8. ரசத்தின் தேவைக்கேற்ப பயிறு மற்றும் வேக வைக்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக் கொள்ளவும்.
  9. இனி அடுப்பை சிம்மில் வைத்து மல்லி தழையை நறுக்கி சேர்க்கவும். நன்றாக நுரைத்து வந்ததும் ரசம் கொதிக்கும் முன் இறக்கவும்.
  10. அவ்வளவுதான். சுவையான பச்சை பயிறு ரசம் ரெடி.