டீ காபியுடன் சாப்பிட ருசியான மைதா சிப்ஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: மைதா மாவு இருந்தால் இது போன்று சிப்ஸ் ஒரு முறை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்.எப்படி இந்த ஸ்னாக்ஸ் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 கப் மைதா
  • ¾ கப் பால்
  • 1 டீஸ்பூன் நெய்
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் மைதா மாவுடன் நெய் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
  2. வெது வெதுப்பான பால் ஊற்றி அத்துடன் சீரகம், உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு பெரிய உருண்டையாக பிடித்து சப்பாத்தி கட்டையில் மெலிதாக தேய்க்கவும்.
  4. தேய்த்த மாவில் கத்தியால் சின்ன சின்ன டைமண்ட் வடிவத்தில் கோடுகள் போடவும்.
  5. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்த துண்டுகளை எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.