காரசாரமான கிராமத்து பெப்பர் சிக்கன் செய்வது எப்படி ?

Summary: சிக்கன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த உணவு என்றால் அதில் இந்த பெப்பர் சிக்கன் இருக்கும். அவர்களுக்கு அதில் இருக்கும் காரசாரமான சுவையும், அதிலிருந்து வரும் நல்ல மணமும் மிகவும் பிடித்தபோய் இருக்கும். நீங்கள் இந்த பெப்பர் சிக்கன் ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிக்கன் ரெசிபி ஆக இந்த பெப்பர் சிக்கன் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த சிக்கன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். அதனால் இன்று பெப்பர் சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ KG சிக்கன்
  • 2 tbsp மிளகு
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp சீரகம்
  • 3 tbsp எண்ணெய்
  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 3 வரமிளகாய்
  • 1 tbsp இஞ்சி
  • 1 tbsp பூண்டு
  • 2 வெங்காயம்
  • உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் நாம் வாங்கி வைத்துள்ள சிக்கனை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்பு மிக்ஸி ஜாரில் மிளகு, சோம்பு மற்றும் சீரகம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, வரமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொண்டு, வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய் மற்றும் நாம முதலில் அரைத்து வைத்த மிளகு பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள் கடாய் அடி பிடிக்காமல் இருப்பதற்காக செறிது அளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் எப்படியாக சிக்கன் நன்றாக வேகும் வரை வாங்கிக் கொண்டு.
  5. அதன் பின்பு கடைசியாக சிறிது கருவேப்பிலை இலைகளை தூவி ஒருமுறை நன்றாக கிளறி விட்டு கடாயை இறக்கி விடுங்கள், அவ்வளவுதான் காரசாரமான பெப்பர் சிக்கன் இனிதே தயாராகிவிட்டது.