வார இறுதி நாட்களில் முழுக்கோழி பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: நீங்கள் சிக்கன் பிரியரா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. முழுக்கோழி பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கோழி
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 எலுமிச்சை பழம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 அங்குலம் இஞ்சி
  • 1 பூண்டு
  • ¼ டீஸ்பூன் கலர் பவுடர்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. கோழியை நன்கு சுத்தம் செய்து தேவையற்ற பாகங்களில் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பௌலில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத்தூள், கலர் பவுடர், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  3. அடுத்து சுத்தம் செய்த முழுக்கோழி மீது தடவவும். அணைத்து பக்கங்களிலும் மசாலா படுமாறு தடவி. சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  4. அடுத்து ஒரு பெரிய வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழியை போட்டு நன்றாக வெந்த பிறகு எடுக்கவும்.