ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!!

Summary: பொதுவாக சப்பாத்தி அல்லது நான்னுக்கு சிக்கன் பட்டர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, அல்லது வெஜிடபிள் குருமா இது போன்று சைடிஷ்களை தொட்டு உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு இவைக்கு மாற்றாக சுவையான முட்டை கிரேவி செய்து சுவைக்கலாம். பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் முட்டை எப்போதுமே இருக்கும். ஏனென்றால் வீட்டில் எதுவும் இல்லாத நேரத்தில் கூட சட்டென்று ஏதாவது செய்ய நினைக்கும் போது முட்டையை வைத்து நாம் அந்த வேளை உணவை முடித்து விடுவோம். அந்த அளவிற்கு முட்டை சிம்பிளாக செய்யக் கூடிய உணவு. முட்டை கிரேவி தோசை மற்றும் பூரிக்கும் தொட்டு உண்ண உகந்தது.

Ingredients:

  • 5 முட்டை
  • 1 பெரிய
  • 1 தக்காளி
  • 1/2 கப் புளிக்காத தயிர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் வெள்ளை
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு தேங்காய்
  • 5 முந்திரி
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு
  • 3 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் புதினா
  • 1/4 கப் கொத்தமல்லி
  • 2 மிபச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கரண்டி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் வெறும் வாணலியில், வேர்கடலை, கசகசா, முந்திரி, எள் சேர்த்து வறுத்து பின் நறுக்கிய தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போக வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  3. பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
  4. பின் வறுத்தவற்றை ஆற விட்டு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வதக்கிய வெங்காயம் சேர்த்து மையாக அரைக்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி வேக வைத்த முட்டையை கீறி சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.
  6. இனி கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  7. பின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும் மசாலா பொருட்கள் சேர்த்து கலக்கவும்.
  8. பின் தக்காளி விழுது சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  9. அது கொதித்ததும் புளிக்காத க்ரீமி-யான தயிரை நன்றாக கலந்து விட்டு அதனுடன் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து மசாலாவில் பிரட்டிய முட்டை சேர்க்கவும். மீண்டும் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  11. பின் 5நிமிடங்கள் கழித்து நறுக்கிய மல்லித்தழை புதினா மற்றும் கீறிய மிளகாய் சேர்த்து கலந்து விட்டு மீண்டும் 5 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும்.
  12. இப்பொழுது கிரேவி கெட்டியாகி இருக்கும். மேலே மீண்டும் நறுக்கிய மல்லி புதினா இலை தூவி பரிமாறலாம்.
  13. அவ்வளவுதான். சுவையான, ஹைதராபாத் ஸ்டைலில் தயிரை மிக முக்கிய பொருளாக வைத்து தயார் செய்த முட்டை கிரேவி ரெடி.
  14. இது எல்லா வகையான சப்பாத்தி, மசாலா பராத்தா, நாண்க்கு மிகச் சுவையாக இருக்கும்.