Summary: தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமடைந்து இருக்கிறது. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும்.