சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான சேனைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க!

Summary: செட்டிநாடு சேனைக்கிழங்கு மசியல் இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க இந்த கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் சேனைக்கிழங்கு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
  • உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 1 மிளகாய் வற்றல்
  • ¼ டீஸ்பூன் பெருங்காயம்
  • ¼ டீஸ்பூன் உளுந்து
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 துண்டு இஞ்சி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சேனைக்கிழங்கை போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசிய வேக வைத்துக்கொள்ளவும்.
  3. வெந்த பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி வேக வைத்து சேனைக்கிழங்கை இதில் கொட்டி கிளறவும்.
  4. கடைசியாக லெமன் ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.