உடல் எடையை வேகமாக குறைக்கும் காலிஃபிளவர் பொரியல் செய்வது எப்படி ?

Summary: காலிஃப்ளவர் பொரியல் செய்து சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும். இப்படி நீங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து குறைவான கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் மிக எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம். இன்று உடல் எடையை குறைக்கும் குறைந்த கலோரிகள் கொண்ட காலிஃபிளவர் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1  பூ காலிஃபிளவர்
  • 1 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • ½ tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 2 tbsp சாம்பார் மசாலா
  • 1 tbsp கரம் மசாலா
  • உப்பு
  • புதினா இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு காலிஃபிளவர் பூ முழுவதையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் போட்டு இருமுறை தண்ணீர் வைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுபில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
  2. அதன்பின் கடுகு நன்கு பொரிந்து வந்ததும் அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயங்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், இஞ்சி பூண்டு விழுது பச்சை வானை போகி வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதனுடன் ஒரு குடை மிளகாய்யை சேர்த்து கொள்ளவும்.
  4. அதன் பின் நாம் கழுவி வைத்திருக்கும் காலிஃபிளவர் பூவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், சாம்பார் மசாலா பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  5. பின் சிறிதாக நறுக்கிய புதினா இலைகளையும் இதனுடன் சேர்த்து காலிஃபிளவர் நனாகு வேகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கடாயை கீழே இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காலிஃபிளவர் பொரியல் தயார் இதை சப்பாத்தியுடன் சாப்பிடும்போது உங்கள் உடல் எடை சட்டனே குறைய ஆரம்பித்து விடும்.