குக் வித் கோமாளி மைம் கோபியின் வாழைக்காய் கோப்தா கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Summary: வாழைக்காய் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு வாழைக்காய் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம்பிடிப்பார்கள். அப்படி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வாழைக்காய் வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வாழைக்காய் கோப்தா கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாக கோப்தா என்பது ஒரு வட இந்திய ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் சுவையான ரெசிபியும் கூட. இது நிச்சயம் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 வாழைக்காய்
  • 2 சின்ன உருளைக்கிழங்கு
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை
  • 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 நறுக்கிய
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி
  • 1/4 கப் முந்திரி பேஸ்ட்
  • உப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் நெய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 வாணலி
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு வாணலியில் வாழைக்காய் மற்றும் 2 சிறிய உருளைக்கிழங்குகளை தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் தோல் நீக்கி உப்பு சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்.
  3. மசித்த வாழைக்காயில், மிளகாய் தூள், கரம்மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கடலைமாவு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  5. பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக, நன்கு வதக்கவும்.
  6. பின் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள் எல்லாம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் தேவையான உப்பு சேர்த்து, அரைத்த முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். தேவையானால் கீரிம் சேர்த்து கொள்ளவும்.
  8. தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் வாழைக்காய் பால்ஸ் சேர்த்து வதக்கவும்.
  9. தேவையானால், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை தூவி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.
  10. சுவையான கோப்தா கறி ரெடி. இதை சாதத்துடன், சப்பாத்தியுடன், புலாவ் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.