ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மசாலா பணியாரம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி பணியாரமும் காலியாகும்!

Summary: மசாலா பணியாரம் பணியாரம் என்றாலே பலருக்கும் பிடித்தமான உணவு. அந்த வகையில் ஒரு முறை இது போன்று மசாலா பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த பணியாரம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 ஆழாக்கு பச்சரிசி
  • 1 ஆழாக்கு உளுந்து
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 7 பச்சை மிளகாய்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு,
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. அரிசியும், உளுந்தையும் கழுவி தண்ணீர் 2 மணி நேரம் ஊறவைத்து மையாக அரைத்து , தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை கிள்ளி போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் கடாயில் ½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கி கலந்து வைத்துள்ள மாவில் இதை கொட்டி கலந்துகொள்ளவும்.
  3. அடுத்து ஒரு கடாயில் பொரிப்பத்ற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. இப்பொழுது மசாலா பணியாரம் தயார்.