மணக்க மணக்க நீங்க வைக்கிற நண்டு ரசத்தின் வாசம் வீடு முழுவதும் வீசும், ருசியும் அசத்தலாக இருக்கும்!

Summary: நாம் இங்கு ஒரு நண்டு ரசத்தின் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். இந்த ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை இந்த நண்டு ரசத்தை வைத்து பாருங்கள். சுடச்சுட கூடுதல் சுவையுடன் நண்டு ரசம் கிடைக்கும். நண்டு ரசம் விரைவாக தயாரிக்கப்படுவதுடன், குடிப்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் சத்துக்கள் நிறைந்த இந்த நண்டு ரசம் குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே நண்டு ரசம் செய்யும் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ நண்டு
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு
  • 5 பல் பூண்டு
  • 1 கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் கொத்து மஞ்சள்தூள்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. நண்டை நன்கு சுத்தம் செய்து, 2 முறை மஞ்சள்தூளில் பிரட்டி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் நண்டு, மிளகாய் தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்னர் 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாறவும். இது சளியை நீக்கும் நல்ல மருந்து.