பூ போன்ற மென்மையான இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! 2 இடியாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: இடியாப்பத்தை பூ போன்ற மென்மையாக குறைந்த நிமிடங்களிலா எளிதாகவே செய்து விடலாம். இடியாப்பதிற்கு தேங்காய்ப்பால் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏன் கூடுதலாக இரண்டு இடியாப்பம் கூட வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூட இது போன்ற இடியாப்பம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்களே அடிக்கடி இனி இடியாப்பம் செய்ய சொல்வார்கள். ஆம், இன்று பூ போன்ற இடியாப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்யும் முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Ingredients:

  • 1 ½ கப் இடியாப்ப மாவு
  • 1 tbsp எண்ணெய்
  • உப்பு
  • கொதித்த நீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 இடியாம்பம் பிழியும் இயந்திரம்

Steps:

  1. முதலில் இடியாப்பத்திற்கு எடுத்துக் கொண்ட மாவு கடையில் வாங்கி இருந்தால் அதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் இல்லை வீட்டில் உள்ள அரிசி மாவை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவை காயில் சேர்த்து சிறிது நேரம் வறுத்து அதன் பின் பயன்படுத்தலாம்.
  2. பின்பு இடியாப்ப மாவை ஒரு பெரிய அளவு பவுளில் எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் பாத்திரத்தை இறக்கிவிடவும்.
  3. பின் இடியாப்ப மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள் பின்பு சூடான தண்ணீரை சேர்த்துக்கொண்டு மாவை கரண்டியால் அல்லது ஸ்பூன் போன்றவற்றால் கலந்து விடுங்கள்.
  4. அதன் பின் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெயும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மாவு கெட்டியான பதத்தில் இருக்குமாறு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள் கெட்டியான பதத்திற்கு மாவு வந்ததும் சூடு ஆறிய பிறகு கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
  5. பின் இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் மாவை நிரப்பி இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் மேல் மாவை பிழிந்து கொள்ளுங்கள் இடியாப்பம் பிழிந்த மூடி விடுங்கள். பின்பு ஏழு நிமிடங்கள் கழித்து நன்றாக ஆவி வரும் பொழுது எடுத்து விடுங்கள் அவ்வளவு தான் பூ போன்ற மென்மையான இடியாப்பம் தயாராகி விட்டது.