அசத்தலான ருசியில் வெண்டை கத்தரி புளிக்கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: வெண்டைகத்தரி புளிக்கறி ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான வெண்டைகத்தரி புளிக்கறிக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு.  இப்படிப்பட்ட வெண்டை கத்தரிபுளிக்கறி எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • 2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • உப்பு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 100 கிராம் கத்தரிக்காய்
  • புளி
  • 2 தக்காளி
  • 100 gram வெண்டைக்காய்
  • வெந்தயம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. வெண்டைக்காயைஅரை இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி பசை தன்மை போக வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், தாளிக்கவும்.
  3. அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. அதன் பின்னர் கத்தரிக்காய் மற்றும் எல்லா தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். பிறகு ஊற வைத்த புளியைகரைத்து ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
  5. கலவை கொதித்ததும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்திருக்கவும். நீர் வற்றி குழம்பு சுண்டியதும் இறக்கவும். சுவையான வெண்டை கத்தரி புளிக்கறி ரெடி.