ரூசியான கொத்து சப்பாத்தி செய்வது எப்படி ?

Summary: நாம் பரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் புரோட்டா என்பது முழுக்க முழுக்க மைதாவினால் தயார் செய்யப்படுவது நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பொருட்களில் மைதாவும் ஒன்று தான். ஆகையால் இனி கொத்து பரோட்டா சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கொத்து சப்பாத்தி ஒரு முறை உங்கள் வீட்டில் சமைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதும் என்று சொல்ல மாட்டார்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு தரமான உணவு. இன்று இந்த கொத்து சப்பாத்தி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 4 சப்பாத்தி
  • 3 tbsp எண்ணெய்
  • ¼ கடுகு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • ½ tbsp சீரகத்தூள்
  • 2 தக்காளி
  • 3 முட்டை
  • ½ tbsp மிளகுத்தூள்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் மென்மையான சப்பாத்தி தயார் செய்து கொண்டு. அதன் பின் அதில் நான்கு சப்பாத்திகளை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்..
  2. எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் அதில் சிறிது கடுகு சேர்த்து கொள்ளவும், கடுகு நன்கு பொரிந்தவுடன் அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து ஐந்து வினாடிகள் தாளித்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு இதனுடன் இரண்டு சீரிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வரம் வரை வதக்கி கொள்ளுங்கள்.
  4. அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களையும் இதனோடு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  5. தக்காளி மென்மையாக மசிந்து வந்ததும் அடிபிடிக்காமல் இருக்க சிறிய அளவு தண்ணீர் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். அதன் பின் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. முட்டை நன்கு வெந்ததும் இதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தி மற்றும் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் கொத்து சப்பாத்தி இனிதே தயாராகிவிட்டது.