Summary: தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர். இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இதை சர்க்கரை பாகுவில் ஊற வைப்பதால் இந்த ஜூஸின் தன்மை இதுக்கு கிடைக்கிறது.