மதிய உணவுக்கு பாகற்காய் சிப்ஸ் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: உங்கள் வீட்டில் உள்ளோர் சிப்ஸ்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி கடைகளில் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவார்களா? முக்கியமான உங்கள் வீட்டில் இருப்போருக்கு பாகற்காய் சிப்ஸ் பிடிக்குமா? அப்படியானால் அந்த சிப்ஸை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வீட்டில் இருக்கும்போது ஏதாவது கொறிக்க வேண்டும் என வாய் தேடும். அப்படி தேடும்போது வீட்டில் பாகற்காய் இருந்தால், சிப்ஸ் செய்து சாப்பிடுங்க.

Ingredients:

  • 2 பெரிய பாகற்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பெரிய
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. பாகற்காயை கழுவி வட்ட வடிவத்தில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. நறுக்கிய பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி, உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
  3. ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு சேர்க்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.
  4. அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. மசாலாவுடன் பாகற்காயை நன்கு கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  6. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் கலந்து வைத்துள்ள பாகற்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. பொன்னிறமாக பொரித்த பாகற்காய் சிப்ஸ்ஐ எடுத்து பௌலில் வைக்கவும்.
  8. அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
  9. பின்னர் பொரித்த பாகற்காயை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  10. இப்போது மிகவும் சுவையான,மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் சுவைக்கத்தயார்.
  11. இந்த சுவையான, மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் தயார். எல்லா வெரைட்டி ரைஸ் உடன் சேர்த்து சுவைக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் போலும் சுவைக்கலாம்.